இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் 107-ஆவது பிறந்தநாள் இன்று (நவம்பர் 19) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்திரா காந்தியை நினைவு கூர்ந்து மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “இந்தியாவின் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தியின் வாழ்க்கையிலிருந்து கோடிக்கணக்கான இந்தியர்கள் தொடர்ந்து உத்வேகம் பெறுவார்கள். தனது வாழ்நாள் முழுவதும் போராட்டம், தைரியம் மற்றும் ஆற்றல்மிக்க தலைமையின் உருவகமாக அவர் இருந்தார். தேசத்த்தின் வளர்ச்சிக்காக தன்னலமின்றி பணியாற்றினார்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திரா காந்தியுடன் தான் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், “தைரியம், அன்பு இந்த இரண்டிற்கும் உதாரணம் பாட்டி இந்திரா தான். தேசநலன்களில் அச்சமின்றி இருக்க வேண்டும் என்பதை நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அவருடைய நினைவுகள் தான் எனது பலம், அவை எப்போதும் என்னை வழிநடத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…