வைஃபை ஆன் செய்தவுடன் எம்.பி தேர்தலுக்கு தயாராவதற்காக பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் கார்கேவும் தயாராவது பற்றிய அப்டேட்டுகள் வந்து விழுந்தன.
“பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்தியா கூட்டணி இரு கூட்டணிகளும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆகஸ்டு 1 முதல் காங்கிரஸ் மாநிலத் தலைவர்களை வரிசையாக சந்திக்கிறார் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் 300க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பதவியேற்பது உறுதி என்று பேசி வருகிறார்.
கடந்த 2022 செப்டம்பரில் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தை அமித் ஷாவும், பாஜக தேசிய தலைவர் நட்டாவும் கூட்டினார்கள். 2019ல் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடியாத 144 தொகுதிகளில் 2024 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதற்காக அந்த 144 தொகுதிகளுக்கும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
மத்திய அரசால், மாநிலத்தில் பாஜக அரசு என்றால் மாநில அரசாலும் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள், பயனாளிகளின் எண்ணிக்கையை அமைச்சர்கள் கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் இந்த பணியில் அமைச்சர்கள் மெத்தனமாக இருந்ததால் அமித் ஷா கடிந்துகொண்டார். பாஜக வரும் தேர்தலில் 350க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற வேண்டும் என்று அந்த கூட்டத்தில் பேசினார். ஆனால் சமீப மாதங்களாக அமித் ஷா 300க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்து மீண்டும் மோடி பிரதமர் ஆவார் என்றே கூறி வருகிறார்.
சில தினங்களுக்கு முன் இந்தியா நியூஸ் மற்றும் சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் வரும் 2024 எம்பி தேர்தலில் பாஜக கடந்த முறை பெற்ற 303 தொகுதிகளை விட பத்து தொகுதிகளுக்கு மேல் குறைந்து 290 தொகுதிகள் பெறும் என்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 318 இடங்களைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேநேரம் பிரதமர் அலுவலகம் மத்திய உளவுத்துறைக்கு ஒரு சர்வே எடுக்க உத்தரவிட்டது. கடந்த ஜூலை 18 ஆம் தேதி இரண்டாம் முறையாக பெங்களூருவில் கூடிய எதிர்க்கட்சிகள் தங்களது அணிக்கு, INDIA என்று பெயரிட்டனர். இந்த பெயரே நாட்டு மக்களிடம் பெரும் பேசு பொருளாக மாறியது. பிரதமர் மோடி கூட நாடாளுமன்ற பாஜக கூட்டத்தில், ‘ஈஸ்ட் இண்டியா கம்பெனி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இந்தியன் முஜாஹிதின் போன்றவற்றில் கூடத்தான் இந்தியா இருக்கிறது’ என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணியை சாடினார்.
ஆனால் உள்ளுக்குள் இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்ட பிறகு இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் மக்களின் மனநிலை என்ன என்று அறிய மத்திய உளவுத்துறை மூலம் சர்வே எடுக்க உத்தரவிட்டார். இந்த சர்வேயில் மத்திய உளவுத்துறைக்கு தனியார் நிறுவனங்களும் உதவி செய்தனர். இந்தியா முழுவதும் மக்களிடம் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த சர்வே முடிவு சில தினங்களுக்கு முன் மோடியிடம் சமர்பிக்கப்பட்டது.
அதில் இப்போதைய சூழ்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 200 எம்பி சீட்டுகளைத் தாண்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உளவுத்துறை அதிகாரிகளே மிக தயக்கத்தோடுதான் பிரதமர் அலுவலகத்துக்கு இந்த ரிப்போர்ட்டை அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதைப் பார்த்து மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதிர்ந்து போய்விட்டார்கள்.
இந்த நிலையில்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் இப்போதைய தங்களுக்கு ஆதரவான நிலைமையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்திருகிறது பாஜக.
அதன் ஒரு அம்சமாகத்தான் மணிப்பூர் தலைநகர் இம்பாலில், ஜூலை 29 ஆம் தேதி குகி சமூகத்துக்கு எதிராக ஒரு பேரணி நடந்திருக்கிறது. வடகிழக்கு மாநிலத்தில் நடக்கும் இன மோதல்களுக்குக் காரணமான ‘குகி-சின் பயங்கரவாதிகளுக்கு’ எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சிவில் சமூகக் குழுக்களின் பெயரில் இந்த பேரணி நடைபெற்றுள்ளது. இதன் பின்னணியில் பாஜகதான் இருக்கிறது என்கிறார்கள்.
200 இடங்களுக்கு மேல் தாண்டாது என்ற ரிப்போர்ட்டால் அதிர்ந்துபோயிருக்கும் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தங்களது ஆதரவு தளங்களை உறுதிப்படுத்துவதற்கான வேலைகளை ஒவ்வொரு மாநிலத்திலும் செய்யத் தொடங்கிவிட்டார்கள்”என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
ஷாருக்கான் ரசிகர்களுக்கு விஷூவல் ட்ரீட்டாக “வந்த எடம்”
சினிமா திருட்டு – 3 ஆண்டு சிறை : மசோதா நிறைவேற்றம்!
இந்தா 200 வச்சிக்க..