வாக்காளர் பட்டியலில் முறைகேடு: அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் உள்ளதா என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரில், வாக்காளர் பட்டியலில் உள்ள 40 ஆயிரம் பேர் ஈரோடு கிழக்கு தொகுதியில் வசிக்கவில்லை என்றும் 8 ஆயிரம் வாக்காளர்களின் பெயர் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகார் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தை சத்யபிரதா சாகு ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அனுப்பும் விரிவான அறிக்கையை சத்யபிரதா சாகு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளார்.
செல்வம்
திமுக பெண் கவுன்சிலர் மரணம்: முதல்வர் இரங்கல்!
பிபிசி அலுவலகங்கள்: மூன்றாவது நாளாக சோதனை!