இந்தியப் பொருளாதாரம் கடந்த 9 ஆண்டுகளில் 10-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியபோது,
“நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும். கொரோனா மற்றும் உக்ரைன் ரஷ்யா போருக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது.
சுதந்திரத்தின் 75 வது ஆண்டில், இந்தியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகள் அங்கீகரித்து வருகிறது.
இந்தியப் பொருளாதாரம் கடந்த 9 ஆண்டுகளில் 10-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் 11.7 கோடி வீட்டுக் கழிப்பறைகள் மற்றும் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 9.6 கோடி பேருக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பிரிவினருக்கும் பயன் தரும் ஒரு வளமான பட்ஜெட்டாக இது அமையும்.” என்று தெரிவித்தார்.
செல்வம்
மெட்ரோ ரயில் திட்டப்பணி 3 மற்றும் 5: ரூ.404.45 கோடிக்கு ஒப்பந்தம்!
இஸ்ரேலில் உள்ள முக்கிய துறைமுகத்தை வாங்கிய அதானி நிறுவனம்!
ஆர்.என்.ரவி ‘அவுட்’… தமிழிசை ‘இன்’-திடீர் திருப்பம்!