இந்திய நாட்டுக்கு ஸ்டாலின் தலைமை தாங்கும் காலம் வரும்: துரைமுருகன்

அரசியல்

தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் இந்தியாவுக்கே தலைமை தாங்கும் காலம் வரும் என்று திமுக பொதுச்செயலாளரும்  அமைச்சருமான துரைமுருகன்  பேசியுள்ளார்.

இன்று (மார்ச் 1) ஸ்டாலின் பிறந்த தினத்தை ஒட்டி சென்னையில் அகில இந்திய தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன  கார்கே, அகிலேஷ் யாதவ், ஃபாருக் அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் பேசிய துரைமுருகன்,

 “எப்போதெல்லாம் இந்தியாவின் இறையாண்மைக்கும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கும் சவால் ஏற்பட்டதோ அப்போதெல்லாம் தமிழ்நாடுதான் கை கொடுத்திருக்கிறது. மிசா என்னும் அவசர நிலை பிரகடனத்துக்கு மற்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்காதபோது எதிர்த்துக் குரல் கொடுத்தார் கலைஞர். அப்போது அடிபட்டார் நமது இன்றைய முதல்வர். அதன் விளைவாகத்தான் மிசா வாபஸ் பெறப்பட்டது, ஜனநாயகம் மீண்டும் பிறந்தது.

அன்று உங்கள் தந்தையார் இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றினார். இன்று உங்களை இந்தியா எதிர்பார்க்கிறது. நீங்கள் கலைஞர் மகன்,. உங்களுக்கு அந்த வல்லமை, திராணி உண்டு. நீங்கள் கட்சியை காப்பாற்றியிருக்கிறீர்கள், தமிழ்நாட்டை காப்பாற்றியிருக்கிறீர்கள், இந்தியாவையும் காப்பாற்ற வேண்டும். 

இன்று இரண்டு, மூன்று பேர் வந்திருக்கலாம். எழுதி வைத்துக் கொள்ளுங்கள், ;இந்திய ஜனாதிபதி யார் என்பதை கருணாநிதியிடம் கேளுங்கள் என்று இந்திரா காந்தி  அன்று கூறினார்.

என் அனுபவத்தில் சொல்கிறேன். இந்திய நாடு,  உங்கள் வீட்டுக்குள் நுழைந்து நீங்கள் தான் இந்திய நாட்டுக்கு தலைமை தாங்க வேண்டும் என்று கூறும் நிலை வரும்” என்று  பேசி முடித்தார் துரைமுருகன்.

வேந்தன்

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு: கோவை கோனியம்மன் தேரோட்டம்!

பொதுக்கூட்ட மேடையில் ஃபரூக் அப்துல்லாவின் முக்கிய வலியுறுத்தல்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *