India was created by Saints and Rishis

“புனிதர்களால், ரிஷிகளால் உருவாக்கப்பட்டது இந்தியா” – ஆளுநர் பேச்சு!

அரசியல்

இந்தியா எந்த ஆட்சியாளர்களாலும், பாகுபலிகளாலும் உருவாக்கப்படவில்லை. இது புனிதர்களால், ரிஷிகளால் கட்டமைக்கப்பட்டது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சத்குரு தியாகராஜர் 176 வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடும் நிகழ்வு இன்று (ஜனவரி 11) தொடங்கியது.

அதில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அங்குள்ள தியாகராஜரின் சிலையை வழிப்பட்ட அவர் உரையாற்றினார்.

அப்போது, சனாதன கலாச்சாரத்தின் அலை தெற்கிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து தான் நாடு முழுவதும் பரவியது.

இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் ஸ்ரீராமன். இந்தியா எந்த ஆட்சியாளர்களாலும் உருவாக்கப்படவில்லை. இது புனிதர்களால், ரிஷிகளால் கட்டமைக்கப்பட்டது என்றார்.

பேச்சின் நிறைவில் இங்கு வந்துள்ளவர்கள், வராதவர்கள் தமிழ்நாடு மக்கள், பாரத மக்கள் என அனைவருக்கும் அமைதியான உலகம் அமைய வாழ்த்துகிறேன் வேண்டுகிறேன் என தமிழ்நாடு என குறிப்பிட்டார்.

திருவையாறில் ஆளுநர் பேசிய உரையில் ஒரு இடத்தில் தமிழகம் என்றும் ஒரு இடத்தில் தமிழ்நாடு என்றும் குறிப்பிட்டார். இந்தியா என எங்கும் குறிப்பிடவில்லை பாரதம், நாடு என மட்டும் குறிப்பிட்டார்.

கலை.ரா

சட்டப்பேரவை வரலாற்றில் அனுப்பப்பட்ட முதல் கடிதம்!

ஆளுநர் என்ன செய்தார் தெரியுமா? எம்.எல்.ஏக்களிடம் ஸ்டாலின் சொன்ன சீக்ரெட்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0

Comments are closed.