‘இந்தியா’வுக்கு என்.டி.ஏ.வால் சவால் விட முடியுமா? : மம்தா
பெங்களூருவில் நேற்றும் இன்றும் (ஜூலை 18) எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்திலிருந்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேற்று 26 எதிர்க்கட்சிகள் கலந்துகொண்ட இரவு உணவு கூட்டம் நடந்த நிலையில் இன்று காலை 11 மணி தொடங்கி 4 மணி வரை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதன் பின் அனைவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிட்டுள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, “மத்திய பாஜக அரசுக்கு இருப்பது ஒரே வேலைதான். அது மாநில அரசுகளை விலைக்கு வாங்குவது தான். நாங்கள் எங்கள் தாய்நாட்டை நேசிக்கிறோம், நாங்கள் தேசபக்தர்கள். என்.டி.ஏ கூட்டணியால் ‘இந்தியா’ கூட்டணிக்குச் சவால் விட முடியுமா? இல்லை பாஜகவால் சவால் விட முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பாஜகவுக்குக் கீழ் விசாரணை அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்படவில்லை. இன்றைய எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ளதாகவும் நடந்து முடிந்தது என குறிப்பிட்டார் மம்தா பானர்ஜி.
பிரியா
எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் “INDIA”
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திருமா வைத்த கோரிக்கை!