இந்தியா உணவு மிகை நாடாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 3) தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியாவைச் சேர்ந்த 12 கோடி விவசாயிகள், 3 கோடிக்கும் அதிகமான பெண் விவசாயிகள், 3 கோடி மீனவர்கள் மற்றும் 8 கோடி கால்நடை விவசாயிகள் சார்பில் அனைத்து பிரமுகர்களையும் வரவேற்கிறேன்.
நாட்டில் சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்தால் விவசாய விளைபொருட்கள் விளையும் தன்மை மாறும்.
நிலம், இமயமலை, பாலைவனம், தண்ணீர் பற்றாக்குறை பகுதிகள் அல்லது கடலோரப் பகுதிகள் என பல வகையான வேளாண் பகுதிகள் இந்தியாவில் உள்ளது.
இந்தப் பன்முகத்தன்மை உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு முக்கியமானது . இதுவே இந்தியாவை உலகின் நம்பிக்கை ஒளியாக ஆக்குகிறது .
65 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா புதிதாக சுதந்திரம் பெற்ற நாடாக இருந்தது. அப்போது இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கும் விவசாயத்திற்கும் சவாலான நேரம்.
இன்று இந்தியா உணவு மிகை நாடாகவும், பால், பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள் உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருத்தி, சர்க்கரை, தேயிலை, மீன் உற்பத்தியில் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராகவும் உள்ளது” என்று குறிப்பிட்டார்.
இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் மையமாக விவசாயம் உள்ளது என்று கூறிய பிரதமர், இந்தியாவில் 90 சதவீத சிறு விவசாயிகள் உணவுப் பாதுகாப்பின் மிகப்பெரிய பலமாக விளங்குகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
-பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“அவர்களே ஒரு பேரிடர்தான்” : பாஜக அரசை விமர்சித்த கனிமொழி
நீலகிரியில் கனமழை : வானிலை வார்னிங்!
வயநாட்டுக்கு 100 வீடுகளை கட்டித்தரும் கர்நாடகா
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு : துரைமுருகன் குற்றச்சாட்டு!
Comments are closed.