ஏற்றுமதி செய்ததைவிட இறக்குமதியை அதிகமாக செய்த இந்தியா: சீனா வெளியிட்ட தகவல்!  

அரசியல்

கடந்த ஆண்டு இந்திய-சீன வர்த்தகம் ரூ.11 லட்சத்து 15,000 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியா ஏற்றுமதி செய்ததைவிட இறக்குமதி அதிகமாக செய்ததால், இந்தியா வர்த்தகப் பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்திய-சீன படைகள் இடையே லடாக் எல்லையில் மோதல் நடந்தது. இன்னும் இரு நாட்டு படைகளும் முழுமையாக வாபஸ் பெறப்படாததால், அசல் எல்லைக் கோடு பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

அருணாசலப் பிரதேச எல்லையிலும் சண்டை நடந்தது. இதை மீறி, கடந்த ஆண்டு இரு நாடுகளிடையிலான வர்த்தகம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சீன சுங்கத்துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இடம்பெற்றுள்ள தகவலில்,

“கடந்த 2021ஆம் ஆண்டில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் ரூ.10 லட்சத்து 25,000 கோடியாக இருந்தது.

இந்த நிலையில், 2022ஆம் ஆண்டில், இரு நாட்டு வர்த்தகம் ரூ.11 லட்சத்து 15,000 கோடியாக உயர்ந்துள்ளது.

இது முன் எப்போதும் இல்லாத அளவாகும். இதன்மூலம் ஒரே ஆண்டில் வர்த்தகம் 8.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

India imports more from China

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சீனா மேற்கொண்ட ஏற்றுமதி ரூ.9 லட்சத்து 71,700 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 21.7 சதவிகிதம் அதிகம்.

இந்தியாவிடம் இருந்து சீனா மேற்கொண்ட இறக்குமதி ரூ.1 லட்சத்து 43,300 கோடியாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 37.9 சதவிகிதம் குறைவு. இந்தியா ஏற்றுமதி செய்ததைவிட இறக்குமதி அதிகமாக செய்ததால், இந்தியா வர்த்தகப் பற்றாக்குறையை சந்தித்துள்ளது.

இந்த வர்த்தகப் பற்றாக்குறை முதல்முறையாக 100 பில்லியன் டாலரை கடந்துள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை 101.02 பில்லியன் டாலர் (ரூ.8 லட்சத்து 28,200 கோடி) ஆகும்.

2021ஆம் ஆண்டில் 69 பில்லியன் டாலர் மட்டுமே வர்த்தகப் பற்றாக்குறையாக இருந்தது. 2015ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இந்தியா-சீனா இரு தரப்பு வர்த்தகம் 75.30 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் மட்டுமின்றி உலக நாடுகளுடனும் சீனாவின் வர்த்தகம் வளர்ந்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பாவில் தேவைகள் குறைந்தபோதிலும், கொரோனா கட்டுப்பாடுகளால் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் பொது முடக்கம் இருந்தபோதிலும் சீனாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்த இறக்குமதி 1.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சீனாவின் வர்த்தக உபரி 877.6 பில்லியன் டாலராக உயர்ந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

-ராஜ்

கிச்சன் கீர்த்தனா: பஃபே பிரியரா நீங்கள்… இதோ உங்களுக்கான டிப்ஸ்!

”தமிழர் விரோத பாஜகவை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது”- சு.வெங்கடேசன் எம்.பி

ஆளுநருக்கு மிரட்டல் : திமுக பேச்சாளர் அதிரடி நீக்கம்

+1
0
+1
0
+1
1
+1
1
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *