6 ஆவது கட்ட மக்களவைத் தேர்தல்: மாலை 3 மணி வாக்குப் பதிவு நிலவரம்!

அரசியல் இந்தியா

மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப் பதிவு இன்று ( மே 25) நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 இடங்களுக்கும், பீகாரில் 8 இடங்களுக்கும், மேற்கு வங்காளத்தில் 8 இடங்களுக்கும், ஒடிசாவில் 6 இடங்களுக்கும், ஜார்கண்டில் 4 இடங்களுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 14 இடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் எண்ணிக்கை செயலியின்படி, இன்று மதியம் 3 மணி நிலவரப்படி தோராயமான வாக்குப்பதிவு 49.20 சதவீதம் ஆகும்.

மேற்கு வங்காளத்தில் அதிகபட்சமாக 70.19 சதவீத வாக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் மிகக் குறைந்த அளவான 43.95 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. டெல்லியில் 44.58 சதவீதமும், பீகாரில் 45.21 சதவீதமும், ஜார்கண்டில் 54.34 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் 44.41 சதவீதமும், ஒடிசாவில் 48.44 சதவீதமும், ஹரியானாவில் 46.26 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் பாஜக மூத்த தலைவரும், ஜார்கிராம் வேட்பாளருமான பிரனாத் துடு மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கார்பேட்டா பகுதியில் சென்றபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது,

சில வாக்குச் சாவடிகளுக்குள் பாஜக முகவர்களை அனுமதிக்கவில்லை என்று புகார் எழுந்ததை அடுத்து, கார்பேட்டாவுக்கு சென்ற பாஜக வேட்பாளரின் கான் வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வேட்பாளருடன் சென்ற பாதுகாவலர் காயமடைந்தார்.

மேற்கு வங்காளத்தில் இப்படி என்றால் உத்திரப்பிரதேசத்தில்… சமாஜ் வாதி கட்சியின் அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் லால்ஜி வர்மா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

ஆறாவது கட்ட தேர்தலில் அம்பேத்கர் நகரில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை வீட்டுக்காவலில் வைத்து அம்பேத்கர் நகர் நிர்வாகம் தேர்தலில் முறைகேடு செய்ய முயற்சிப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அரவிந்த் குமார் சிங் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் X தள பதிவில், “சமாஜ்வாதியின் வெற்றி பெற்ற அம்பேத்கர் நகர் வேட்பாளர் ஸ்ரீ லால்ஜி வர்மாவின் வீட்டை சோதனையிட போலீசார் அனுப்பப்பட்டனர், ஆனால் போலீசார் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இது மிரட்டுவதற்கான ஒரு முயற்சி. ஸ்ரீ லால்ஜி வர்மாவின் நேர்மையான இமேஜை களங்கப்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கண்டக்டர் Vs கான்ஸ்டபிள்: கட்டிப்புடி வைத்தியம்!

தேசத் தந்தையா சவுக்கு சங்கர் ? – சுப.வீரபாண்டியன் கேள்வி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *