சமூக வலைதளங்களில் போலியான செய்திகளை கண்டறிந்து அவற்றை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் போலி செய்திகள் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் குழப்பத்திற்கு ஆளாகின்றனர். போலி செய்திகள் பரப்புவதை தடுக்க மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப விதிகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள உள்ளது.

அதன்படி, பத்திரிகை தகவல் பணியகத்தால் (PIB) போலி அல்லது பொய் என அடையாளம் காணப்பட்ட எந்தத் தகவலும் சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்கப்படும். மேலும், அந்த செய்தியை வெளியிட்ட நிறுவனங்கள் தடை செய்யப்படும். போலி செய்தி பரப்பும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் சமூக ஊடகங்களில் பயனர்களின் புகார்களை தெரிவிக்க தகவல் தொழில்நுட்ப துறையால் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த பரிந்துரையின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்திய பத்திரிகையாளர் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் இந்த புதிய நடைமுறையானது பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படும் வகையில் உள்ளது.பத்திரிகை துறையினரிடம் மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.” என்று தெரிவித்துள்ளனர்.
செல்வம்
ஆளுநர் குறித்து அவதூறாக விமர்சனம்: திமுக பேச்சாளர் மீது வழக்கு!
ஈரோடு கிழக்கில் போட்டியிடப் போவது யார்? – கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை!
Comments are closed.