|

நாடாளுமன்றம் : இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!

இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று (ஜூலை 1) நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று உரையாற்றினார். ஜூன் 28ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், எதிர்க்கட்சியினர் நீட் தேர்வு முறைகேடு குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என்று கூறினர். இதுகுறித்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸும் அளிக்கப்பட்டது.

இதனை நிராகரித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சனை குறித்து பேசலாம் என்று தெரிவித்தார்.

இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பெரும்பாலும் முடங்கின. எனினும், மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் தொடங்கியது. பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி இந்த விவாதத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர், பாஜக எம்.பி. கவிதா பதிதாரை தொடர்ந்து 9 உறுப்பினர்கள் இதுகுறித்து விவாதித்தனர். இதையடுத்து, இன்று (ஜூலை 1) இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின்போது, விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும், அரசியல் ஆதாயத்திற்காக சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டினர்.

மேலும், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து அவைகளில் விவாதிக்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவை அலுவல்களை ஒத்திவைத்து நீட் முறைகேடு குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்துள்ளது.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆர்சிபி அணிக்காக புதிய பொறுப்பை ஏற்றார் தினேஷ் கார்த்திக்

அமிதாப் பச்சன் இறுதிப்போட்டியை பார்க்காததற்கு இதுதான் காரணமா?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts