India alliance members arrested

புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை: 500 பேர் கைது!

அரசியல்

புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். India alliance members arrested

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி மார்ச் 2ஆம் தேதி காணாமல் போனார்.

அந்த பகுதியைச் சேர்ந்த கஞ்சா போதைக்கு அடிமையான கருணாஸ், 60 வயதான விவேகானந்தன் ஆகிய இரு மிருகங்கள் பாலியால் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்து சிறுமியைச் சாக்கடையில் தூக்கி வீசினர்.

மார்ச் 5 ஆம் தேதி சிறுமியின் உடல் அழுகிய நிலையில் சாக்கடையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது.

இந்த கொடூரத்தை கண்டித்து இன்று (மார்ச் 8) இந்தியா கூட்டணி கட்சியினர் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதன் காரணமாக அரசு, தனியார் பேருந்துகள் ஓடவில்லை. பிஆர்டிசி பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை.

திரையரங்குகளில் பகல் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கடலூர்-விழுப்புரம் சாலையில் ஒரு சில பெட்ரோல் பங்குகளைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டிருந்தன. புதுச்சேரியின் முக்கிய பெரிய மார்க்கெட் குபேர் மார்க்கெட், மீன் அங்காடியும் மூடப்பட்டிருந்தது.

மறுபக்கம் புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு இந்தியா கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி ராஜா தியேட்டர் சந்திப்பில் ஒன்று திரண்ட இந்தியா கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றவர்களை தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை தாண்டி ஆளுநர் மாளிகைக்குள் செல்ல முயன்றதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

எனினும் தடுப்புகளைத் தாண்டி உள்ளே சென்ற சிலர், ஆளுநர் மாளிகை வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில் போராட்டத்தைக் கைவிட மறுத்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் திமுக சிவா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். India alliance members arrested

இந்த முற்றுகை போராட்டத்தால் இன்று புதுச்சேரி பரபரப்புடன் காணப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

இன்போசிஸ் நிறுவனர் மனைவி சுதா மூர்த்தி எம்.பி.யாக நியமனம்!

பெங்களூரு குடிநீர் தட்டுப்பாடு : கார் கழுவ தடை… மீறினால் அபராதம்!

வேளச்சேரி- தாம்பரம்: மெட்ரோ ரயில் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0