பிபிசி அலுவலகத்தில் ஐடி ஆய்வு: முதல்வர் கண்டனம்!

அரசியல்

பிபிசி அலுவலகத்தில் சோதனை நடத்தியதற்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி குறித்து இந்தியா: மோடி கேள்வி என்ற தலைப்பில் பிபிசி ஆவணப்படம் வெளியிட்டது.

இந்தச்சூழலில் இன்று (பிப்ரவரி 14) டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி நிறுவனங்களில் வருமான வரித்துறை ஆய்வு நடத்தியது. இதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கம் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ”எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்திற்கும் வெளிப்படையான மற்றும் சுதந்திரமான நிறுவனங்கள் இன்றியமையாதவை. ஆனால் தற்போதைய பாஜக அரசின் கீழ் மதிப்புமிக்க நிறுவனங்கள் முற்றிலும் சுதந்திரத்தை இழந்துள்ளன.

அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை போன்றவை தற்போது அரசியல் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அரசியல் எதிரிகளைக் குறிவைக்கத் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பட்டியலில் தற்போது பிபிசி நிறுவனத்தின் மீதான வருமான வரித்துறை சர்வே சேர்ந்துள்ளது.

இந்திய ஜனநாயகத்தையும், பத்திரிக்கைச் சுதந்திரத்தையும் அழித்ததற்குக் காரணமானவர்களை இந்நாட்டு மக்கள் கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வரவிருக்கும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ஊடகங்கள் மீது நடக்கும் தாக்குதலின் அங்கமாகவே இந்த ஆய்வு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

பிரியா

”எங்கள் வலியை உணருங்கள்” : நெடுமாறன் பேட்டி பற்றி ஈழத் தமிழர்கள்

”நான் அவன் இல்லை” கடுப்பான பிருத்வி ஷா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *