செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாருக்கு வருமான வரித்துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் மற்றும் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியானது.
சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை செய்ய அசோக் குமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.
இரண்டு முறை சம்மன் அனுப்பியும் வருமான வரித்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராகவில்லை. இந்தநிலையில் மூன்றாவது முறையாக ஜூலை 27-ஆம் தேதி ஆஜராக அசோக் குமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
செல்வம்
மகாராஷ்டிரா துணை முதல்வரானார் அஜித் பவார்
தென்காசி கைதி மரணம் – வீடியோவை டெலிட் செய்த போலீஸ் : என்ன நடந்தது?