அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அசோக் குமார் அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 10 இடங்களிலும் மத்திய இராணுவ படை வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் இன்று (ஜூலை 11) காலை முதல் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக அசோக் குமார் விசாரணைக்கு ஆஜராக வருமான வரித்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக அவகாசம் வேண்டும் என்றும் கேட்டிருந்தார். இந்த நிலையில் தான் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி ஏற்கனவே கடந்த மே 26 ஆம் தேதி கரூரில் அசோக் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்ற போது, திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் இந்தமுறை மத்திய ராணுவப்படை பாதுகாப்புடன் சோதனை செய்து வருகின்றனர்.
மோனிஷா