கரூரில் உள்ள சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று (ஜூன் 23) சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 26 ஆம் தேதி கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 7 நாட்கள் சோதனை நடத்தினர்.
அப்போது கரூர் – ஈரோடு சாலையில் அமைந்துள்ள சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் உணவகத்திற்கு வருமான வரித்துறை சோதனைக்கு சென்ற போது அவர் ஊரில் இல்லை என்பதால் உணவகத்திற்கு சீல் வைத்துவிட்டு சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் கரூர் கோதை நகரில் உள்ள கார்த்திக் வீட்டில் 20-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை வீரர்கள் உதவியுடன் 5 வாகனங்களில் வந்த வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மோனிஷா
டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த சோகம்!
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!