பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக இன்றும் (நவம்பர் 6) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறை முகங்கள் துறை என மூன்று முக்கிய மூன்று துறைகளுக்கு அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு.
திருவண்ணாமலையில் இவருக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 3ஆம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரது மகன் எ.வ.வே.கம்பன் வீட்டிலும் சோதனை தொடர்ந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் எ.வ.வேலுவிற்கு தொடர்புடைய நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான அருணை கன்ஸ்ட்ரக்ஷனுக்கு தொடர்புடைய இடங்களிலும் 2வது நாளாக சோதனை நீடிக்கிறது.
சோதனை நடைபெறும் இடங்களில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 3 நாட்களாக நடத்திய சோதனைகளில் கண்டறியப்பட்ட ஆவணங்கள் என்ன என்பது குறித்து வருமான வரித்துறை இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மோடி முதல் விக்ரம் பிரபு வரை… கோலியை வாழ்த்திய பிரபலங்கள்!
ஜவுளி உற்பத்தி நிறுத்தம்: தினமும் ரூ.100 கோடி முடங்கும் நிலை!