அதிமுக நிர்வாகி இளங்கோவனுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று (அக்டோபர் 24) வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஜம்முநாதபுரம் பகுதியில் உள்ள எம்.ஐ.டி. வேளாண் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரிகளில் கடந்த 22ஆம் தேதி வருமான வரித் துறை சோதனை நடத்தினர்.
இந்த கல்வி நிறுவனம் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க.,செயலாளராக பொறுப்பு வகித்து வரும் இளங்கோவனுக்கு சொந்தமானது.
இவர் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கிய நண்பர் ஆவார்.
ஏற்கனவே இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய்க்கு சொத்துகளை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் 2வது நாளாக நேற்று முழுவதும் சோதனை நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக நேற்று பேட்டியளித்த இளங்கோவன், “எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை. கல்லூரியில் கடந்த 3 நாட்களாக வருடாந்திர கணக்கு தணிக்கை மட்டுமே நடைபெறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
திருச்சியை தொடர்ந்து கோவை மாவட்டத்தின் மூன்று இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி சிவானந்தா காலனியில் செயல்பட்டு வரும் ‘ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம்,
சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் வசித்து வரும் ‘Bull’ நிறுவனத்தின் உரிமையாளர் பொன்னுதுரை வீட்டிலும், உப்பிலிபாளையம் ராமானுஜம் நகரில் வசித்து வரும் ‘லஷ்மி டூல்ஸ்’ உரிமையாளர் வரதராசன் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களது சோதனையை தொடர்ந்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிக் பாஸ் சீசன் 8 : சவுந்தர்யா vs ஜாக்குலின்… பாடி ஷேமிங் செய்வது நியாயமா?
மதுவிலக்கு மாநிலத்தில் டேங்கர் லாரிக்குள் மது பாட்டில்கள் சப்ளை!