முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வீட்டில் ரெய்டு!

Published On:

| By Kavi

திமுக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் அலுவலகத்தில் இன்று இரவு முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது நெல்லை மாவட்ட திமுகவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பாளையங்கோட்டையில் உள்ள ஆவுடையப்பன் அலுவலகத்துக்கு முன்பு திமுகவினர் குவிந்து வருகின்றனர்.

பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

அவரது அலுவலகத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு சோதனை நடந்து வருவதாக ஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மோடி ரோடுஷோவில் மாணவர்கள் : போலீஸ் பதிலளிக்க உத்தரவு!

“விரைவில் செந்தில் பாலாஜி வெளியே வருவார்” : கரூரில் உதயநிதி உறுதி!