“எடப்பாடி தலைமையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது” – வழக்கறிஞர் இன்பதுரை

Published On:

| By Selvam

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்குகிறது என்பதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது என்று அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த  தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 25) தள்ளுபடி செய்துள்ளது.

இந்த தீர்ப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, “ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்குகிறது என்பதை உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

பொதுக்குழு தான் அதிமுகவின் உயர் அமைப்பு. அதனுடைய சட்டதிட்ட விதி பிரிவு 5-இன் படி பொதுக்குழுவின் தீர்ப்பே இறுதியானது என்பதை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் பக்கம் நியாயம் இல்லாததால் அவர்களுக்கு தீர்ப்பு கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானதால் அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியினர் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

செல்வம்

அதிமுக பொதுக்குழு செல்லும்: எடப்பாடிக்கு சாதகமாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

திமுக அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குகள்: நீதிபதியை விமர்சித்த முரசொலி

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment