இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக இன்று (ஜூலை 25 ) தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.
அவையின் கூட்டத் தொடரின் முதல் நாள் ( ஜூலை 18 ) இளையராஜா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அன்று அவர் அமெரிக்காவில் இருந்ததால், அவர் அவைக்கு வரவில்லை. இந்நிலையில் இளையராஜா இன்று (ஜூலை 25 ) பிற்பகலில் மாநிலங்களவை கூட்டம் தொடங்கியவுடன் நியமன உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
மாநிலங்களவைத் துணைத் தலைவர் முன்பு தமிழில் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்.
“மாநிலங்களை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் இளையராஜா என்னும் நான்…. சட்டத்தினால் நிறுவப்பட்டதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்று உறுதியும் கொண்டிருப்பேன் என்றும்,
இந்தியாவின் இறையாண்மையையும் , ஒருமைப்பாட்டையும் , உறுதியாக பற்றியிருப்பேன் என்றும் நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்று கூறி பதவியேற்றுக்கொண்டார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்