மழைநீர் கால்வாய் பணிகள் முடிவடையாத இடங்களில் பாதுகாப்பு தடுப்புகளை வைக்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னையில் மழை பாதித்த இடங்களை இன்று(நவம்பர் 3) அமைச்சர்கள், கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தண்ணீர் ஒரே பாதையில் செல்லாமல் வெவ்வெறு பாதைகளில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் ஒருங்கிணைந்து பகல், இரவாக பணியாற்றி வருகிறது. வால்டாக்ஸ் சாலையில் சுத்தமாக தண்ணீர் தேங்கவில்லை.
நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறையுடன் ரயில்வேயும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் உணவு, தங்குமிடம், குடிநீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
நேற்று(நவம்பர் 2) சென்னையில் மழைநீர் கால்வாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பெண் ஒருவர் விழுந்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், பணிகள் முடிவடையாத இடங்களில் பேரிகார்டுகள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் தவறுகள் நடந்துவிடுகிறது. அதையும் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
கலை.ரா
தெலங்கானா இடைத்தேர்தல் : நள்ளிரவில் கைதான முக்கிய தலைவர்!
குஜராத் தேர்தல்: இன்று அறிவிப்பு!