தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இமானுவேல் சேகரன்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இரண்டு நாள் பயணமாக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றிருக்கும் ஆளுநர் ரவி நேற்று(ஏப்ரல் 18) மண்டபம் மரைக்காயர்பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அதன் பின்னர் மாலை ராமநாதபுரம் அடுத்துள்ள தேவிபட்டினம் நவபாசன நவகிரக கடலில் இறங்கி பூஜை செய்து வழிபட்டார். அதன்பின் தேவேந்திர குல வேளாளர், தேவர் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(ஏப்ரல் 19) காலை உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் சாமி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
இதை முடித்துகொண்டு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள தேவேந்திர குல வேளாளர்களின் அடையாளமாக கருதப்படும் இமானுவேல் சேகரன் நினைவிடைத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு பாரத் மாதாகி ஜே! மக்கள் கவர்னர் ரவி ஜீ வாழ்க! என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பின்னர், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி!
நான் தி.மு.க காரனா? கைய கட்டிட்டு பேசணுமா? சீறிய திருமா