நான் இந்திய பிரதமர் மோடியின் ரசிகன் என்று ட்விட்டர் சேர்மேன் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லியிலிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இதற்கு முன் 5க்கும் மேற்பட்ட முறை பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தாலும் இதுவே அவர் மேற்கொள்ளும் முதல் அரசு முறை பயணமாகும்.
இந்த பயணத்தில் இன்று காலை பிரதமர் மோடி உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும், ட்விட்டர் சேர்மேனுமான எலோன் மஸ்க்கை சந்தித்தார்.
நியூயார்க்கில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எலோன் மஸ்க், “நான் பிரதமர் மோடியின் ரசிகன். இந்திய பிரதமரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார். இந்தியாவில் முதலீடு செய்யுமாறு பிரதமர் மோடி எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். எதிர்காலத்தில் நாங்கள் இருவரும் திட்டம் ஒன்றை அறிவிக்கப் போகிறோம்.
அடுத்த வருடம் இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளேன். இந்தியாவில் டெஸ்லா கம்பெனி அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆற்றல் முதல் ஆன்மீகம் வரை பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து இருவரும் உரையாடினோம் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரியா