அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!

அரசியல்

செம்மண் குவாரி வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், உதவியாளர்களுக்கு சொந்தமான ரூ.14.21 கோடியை அமலாக்கத்துறை இன்று (ஜூலை 26) முடக்கியுள்ளது.

கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது 2012-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி பொன்முடி, கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த சோதனையின் முடிவில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.41.9 கோடி நிரந்தர வைப்பு தொகை, ரூ.13 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளை அமலாக்கத்துறை முடக்கியது.

இதனையடுத்து செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.

இந்தநிலையில், செம்மண் குவாரி வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு  சொந்தமான ரூ.14.21 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சென்னை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பெண் காவலர்கள் குறித்து அவதூறு: சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!

ராயன்: விமர்சனம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *