வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று (மார்ச் 28) பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீதிவீதியாக காரில் சென்றபடியே மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், “மக்களவைத் தேர்தல் முடிந்ததும் டீசல் விலையும், பெட்ரோல் விலையும் பாதியாக குறையும் என்று முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
டீசல், பெட்ரோல் விலை குறைந்தது என்றால், விலைவாசியும் பாதியாக குறையும். அப்படி விலைவாசி குறைந்தால் அதனால் மீதமாகும் தொகையில் உங்களால் தங்கம் வெள்ளி நகைகளை வாங்க முடியும்.
எனவே விலைவாசி குறைய வேண்டும் என்றால் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என்று மக்களிடையே பேசினார்.
ஆம்பூரில் பிரச்சாரம் செய்த அவருக்கு வழிநெடுக மக்கள் தங்களது ஆதரவினை தெரிவித்தனர். மேலும் அவரது பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த விசிக, சிபிஎம் உள்ளிட்ட கட்சியினரும் கலந்துகொண்டு உதய சூரியனுக்கு வாக்கு சேகரித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
முதல் பாதியில் அதிர்ச்சி… இரண்டாம் பாதியில் அதிரடி : டெல்லியை பந்தாடிய பராக்!