திமுகவிற்கு வாக்களித்தால் கருணாநிதியின் வாரிசுகள் மட்டும்தான் பயன் அடைவார்கள் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நேற்று (ஜூன் 27) பாஜகவினருடன் உரையாடிய மோடி, ”எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டுக்கு உகந்தது அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் காந்தி குடும்பம் மட்டுமே பலனடையும். திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே பயனடைவார்கள்.
ஆனால், உங்கள் மகன், மகள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் நலன் வேண்டுமானால், பாஜகவுக்கு வாக்களியுங்கள்.
ஊழல்களில் பிடிப்பட்டுள்ளதால் தான் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்கின்றன. ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையிலிருந்து தப்பிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. ஊழல் தலைவர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் காப்பாற்ற முயல்கின்றனர். ஆனால், அவர்களில் யாரையும் நான் விட்டுவைக்க மாட்டேன். ஒவ்வொரு ஊழல்வாதியையும் கடுமையாகத் தண்டிப்பேன்.
2024 தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும் என்பதால் எதிர்க்கட்சிகள் கடும் கோபத்தில் உள்ளன. அதனால் அவர்கள் கூட்டங்கள் நடத்தி ஒன்று கூடுகிறார்கள். அடுத்த மக்களவை தேர்தலில் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர்.
பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைவோா் மீது நாம் கோபம் கொள்ளக் கூடாது. மாறாக அவா்கள் மீது பரிதாபமே கொள்ள வேண்டும்.
முன்பு தங்களுக்குள் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துக் கொண்ட கட்சிகள், தற்போது ஒன்றுசோ்ந்துள்ளன. பாட்னாவில் ஒன்றுகூடிய எதிா்க்கட்சிகள் அனைத்துக்கும் ஊழல் வரலாறு உள்ளது. நிலக்கரி, 2ஜி, காமன்வெல்த் உள்ளிட்ட ஊழல்களுடன் காங்கிரஸுக்குத் தொடா்புள்ளது.
ரூ.20 லட்சம் கோடி வரையில் எதிா்க்கட்சிகள் ஊழலில் ஈடுபட்டுள்ளன. அதை பாஜக தொண்டா்கள் மக்களிடம் உரிய முறையில் எடுத்துக் கூற வேண்டும். அத்தகைய மோசடிகளில் ஈடுபட்ட நபா்கள் மீது பாஜக அரசு தொடா்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
மோனிஷா
பாசன தேவை: மேட்டூர் அணை நீர் திறப்பு 13,000 கன அடியாக உயர்வு!
பொது சிவில் சட்டம் அவசியம்: பிரதமர் மோடி