’மய்யத்தின் 2 நிபந்தனைகள்… ஏற்காவிட்டால் தனித்துப்போட்டி’ : மவுரியா

Published On:

| By christopher

2 conditions of the mnm

மக்கள் நீதி மய்யத்தின் 2 நிபந்தனைகளை ஏற்காவிட்டால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று அக்கட்சியின் துணைத்தலைவர் மவுரியா தெரிவித்துள்ளார். 2 conditions of the mnm

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று (ஜனவரி 23) நடைபெற்றது.

இதில் நிர்வாக குழுவை சேர்ந்த 5 பேர் மற்றும் செயற்குழு நிர்வாகிகள் 27 பேரும் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.

பிப்ரவரியில் பொதுக்குழு கூட்டம்!

தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மவுரியா செய்தியாளர்களை சந்தித்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்து பேசினார்.

அவர், “இன்று நடைபெற்ற அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அவை, மக்கள் நீதி மய்யத்தின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவினை பிரம்மாண்டமாக நடத்த முடிவெடுக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் வியூகங்கள் மற்றும் தேர்தல் அறிக்கைக தயாரிப்பதற்காக சிறப்பு குழு அமைக்க நிர்வாக குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் வாழ்வு மேம்பாட்டிற்காக கட்சியில் புதிய குழு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டின் மண்டல வாரியாக பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினத்தில் மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தலைவர் கமல்ஹாசன் சிந்தனைகளின் தொகுப்பாக வெளியாகி இருக்கும் ‘மய்யம் தேர்ந்தெடுத்த படைப்புகள் என்ற புத்தகம்’  சென்னை புத்தக கண்காட்சியில் பெரும் வரவேற்பு பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது” என்றார்.

இரண்டு நிபந்தனைகள் உள்ளது! 

தொடர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து அவர் பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன.

முதலாவது, தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், தமிழக மக்களின் நலன்களில் எந்த சமரமும் அனுமதிக்கப்படாது.

இரண்டாவது, தலைவர் கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளுடன் ஒத்துபோகிறவர்களுடன் மட்டும் தான் கூட்டணி அமையும்.

இந்த இரண்டு நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். இல்லையென்றால் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும்” என்று மவுரியா தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”நேதாஜி மட்டும் இல்லை என்றால் சுதந்திரம் கிடைத்திருக்காது” : ஆளுநர் ரவி

திமுக தேர்தல் அறிக்கை குழு – முதல் நாளே தயாரான பட்டியல்!

2 conditions of the mnm

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.