ஆளுநரை தேர்தலில் போட்டியிட சொல்லும் உதயநிதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு சாதாரண டிஎன்பிஎஸ்சி, சிவில் சர்வீஸ் அல்லது குரூப் 4-ஐ பாஸ் பண்ணட்டும், நான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தின் முதல் கட்டம் இன்று (ஆகஸ்ட் 22) திருநெல்வேலியில் நிறைவு பெற்றது.
இதன்பின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “என் மண் என் மக்கள் யாத்திரையில் சின்ன சின்ன கிராமங்களுக்கு எல்லாம் போனோம். 9 ஆண்டுகளாக பிரதமரின் திட்டங்கள் கடைக்கோடி வரை சென்றிருக்கிறது. இந்த திட்டங்கள் மூலமாக மக்களின் வாழ்க்கை மாறியுள்ளது. கட்சியின் வலிமை, அடிப்படை கட்டமைப்புகளை இந்த யாத்திரை மூலம் பார்க்க முடிந்தது.
யாத்திரையின் அடுத்த கட்டம் செப்டம்பர் 3 ஆம் தேதி தென்காசியில் இருந்து ஆரம்பிக்க உள்ளது. தொடர்ந்து தேனி, மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, அவினாசி ஆகிய இடங்களில் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் 36 தொகுதிகளில் நடைப்பயணம் செல்ல உள்ளோம்.
234 தொகுதிகளிலும் 5 கட்டங்களாக நடைப்பயணம் செல்ல உள்ளோம். நடைப்பயணத்தின் முதல் பகுதியில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 8.9 கி.மீ நடந்துள்ளோம். அடுத்தடுத்த கட்டங்களில் இந்த தூரத்தை அதிகரித்து நாள் ஒன்றுக்கு 12 கி.மீ நடக்க உள்ளோம்.
இந்த இரண்டாம் கட்ட நடைப்பயணத்தில் அதிகமான கிராமங்களை நோக்கி செல்ல உள்ளோம். 234 தொகுதிகளில் ஜனவரி 11 2024-க்குள் நடைப்பயணத்தை முடித்து விட வேண்டும்.
நீட் தேர்வை பொறுத்தவரை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ‘இ பாக்ஸ் லேர்னிங்’கை நிறுத்தினார்கள். ஏனென்றால் நீட் மேல் அவர்களுக்கு அடிப்படையில் ஒரு வன்மம் இருக்கின்றது. நீட் தேர்வில் மாணவர்கள் குறைவான மதிப்பெண் வாங்குவதை திமுக சாதனையாகப் பார்க்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2 நீட் தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகமாக தான் இருக்கிறது. நீட் தேர்வையும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர். தேசிய அளவில் தமிழ் மாணவன் முதல் இடம். முதல் 10 இடத்தில் 4 மாணவர்கள் எனத் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது. இது திமுகவிற்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது.
நீட்டை வைத்து அரசியல் செய்து இவ்வளவு தூரம் கொண்டுவந்துவிட்டார்கள். நீட் விவகாரத்தில் திமுக ஒரு இடியாப்ப சிக்கலில் இருக்கின்றது. நீட் நல்லது என்று சொன்னால் இத்தனை காலமாக செய்த அரசியல் வீணாகிவிடும். ஆனால் தரவை வைத்து பார்க்கும் போது நீட் நல்லது. அதனால் தான் திமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்குச் சாமானிய மக்கள் செல்லவில்லை. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் செல்லவில்லை. மாணவர் அணி, இளைஞரணியை வைத்து எவ்வளவோ தூண்டியும் கட்சிக்காரர்களைத் தவிர பொதுமக்கள் செல்லவில்லை.
ஆளுங்கட்சி போராட்டம் நடத்தியிருந்தால் ஸ்தம்பித்து இருக்க வேண்டும். ஆனால் யாருமே போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆளுநர் பதவியைத் துறந்துவிட்டு ஆர்.என்.ரவி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார். இதையே நான் சொன்னால் நன்றாக இருக்குமா?. உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பதவியை துறந்துவிட்டு யுபிஎஸ்சி ப்ரிலிம்ஸ் தேர்வில் தேர்ச்சி பெறட்டும். அப்படி செய்தால் அண்ணாமலை அரசியலை விட்டு போய் விடுவேன். சாதாரண டிஎன்பிஎஸ்சி, சிவில் சர்வீஸ் அல்லது குரூப் 4-ஐ பாஸ் பண்ணட்டும். ஆனால் ஃபிக்ஸிங் எதுவும் பண்ணக்கூடாது.
ஆளுநரின் பதவி என்பது தேர்தலில் நிற்காத ஒரு பதவி. 1950-ல் இருந்து இருக்கிறது. ஒரு விதண்டாவாதத்திற்காக. பொது அறிவு இல்லாமல், அரசு பதவியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநரை தேர்தலில் போட்டியிட அழைக்கிறார்.
நீட்டை பொறுத்தவரை இறுதி முடிவு என்பது குடியரசுத் தலைவர் கையில் இருக்கிறது. இதற்கு முன்பும் 2019-ல் குடியரசுத் தலைவர் நீட் தேர்விற்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். ஒருவேளை தற்போதைய குடியரசுத் தலைவரும் நீட் தேர்விற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தால் திமுக அடுத்து என்ன சொல்வார்கள். குடியரசுத் தலைவரையும் ராஜினாமா செய்து விட்டு தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சொன்னால் ஜனாதிபதியே சிரிப்பார்.
இதனால் திமுகவே இடியாப்ப சிக்கலை பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து திமுகவில் வெளியே வர முடியாது. இந்த வருடமும் நீட் தேர்வில் தேர்ச்சி நன்றாக தான் இருக்கும்.
எனவே நீட்டை வைத்து நாங்கள் அரசியல் செய்தோம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தால் கேம் முடிந்தது. இன்னும் எத்தனை உயிர்களை காவு கொடுக்க போகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார் அண்ணாமலை.
மோனிஷா
சிரஞ்சீவி பிறந்த நாள்: வெளியான முக்கிய அறிவிப்பு!
’ஐசிசி தொடர்களில் எல்லா நேரத்திலும் வெல்ல முடியாது’- கங்குலி
Age bar இல்லனா Mr.Udhy will write and clear the exam. அறிவு கெட்ட அண்ணா*லை இந்த மாதிரி பேசினா ஒட்டு வராது. This statement helps to support Governor. Tamilnadu people will have clear thinking. You may vote % max. Of 7.5
நீங்க ட்ரைனிங் எடுத்த அந்த இன்ஸ்டிட்யூட் எங்க இருக்குனு சொல்லுங்கணா. நீங்களே ஐபிஎஸ் பாஸ் பண்ணுனத பாத்ததும் ஐஏஎஸ், ஐபிஎஸ் ரொம்ப ஈசினு சாதாரண மக்களுக்கேத் தெரிஞ்சி எவ்ளோ காலமாச்சிணா.
உதயா நெஞ்சில இடியா!
அதே மாதிரி நீயும் NEET exam எழுதி clear பண்ணு பார்ப்போம்