நான் மூன்றாவது முறையாக பிரதமரானால் இந்திய பொருளாதாரம் உலகளவில் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் புதுப்பிக்கப்பட்ட ஐடிபிஓ சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நான் 2014ல் ஆட்சிக்கு வந்த போது பொருளாதாரத்தில் இந்தியா 10ஆவது இடத்தில் இருந்தது. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த போது உலகளவில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது.
நான் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் உலகளவில் இந்தியா முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும்” என்று உறுதியளித்தார்.
2024க்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் விரைவுபடுத்தப்படும்” என்றும் குறிப்பிட்டார்.
பிரியா
நெல்லை:பேருந்து பள்ளத்தில் சரிந்து விபத்து!
டிஜிட்டல் திண்ணை: கை கழுவும் ஸ்டாலின்…சிறையில் செந்தில்பாலாஜி மௌன விரதம்!