’அதிமுக எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது’ : பன்னீர் ஆதங்கம்!

Published On:

| By christopher

“இப்போது ஒன்றிணையவில்லை என்றால், எந்த காலத்திலும் அதிமுக வெற்றி பெற முடியாது” என்று பன்னீர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிட்டு திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியிடம் தோல்வியுற்றார்.

அங்கு 3,42,882 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்த அவர், அதிமுக வேட்பாளரை மூன்றாம் இடத்திற்கு தள்ளினார்.

எனினும் தற்போது பிரிந்து நிற்கும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜூன் 10) அளித்த பேட்டியில் இப்போது ஒன்றிணையவில்லை என்றால், எந்த காலத்திலும் அதிமுக வெற்றி பெற முடியாது என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

அவர், ”தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி அமைக்கும் நிலை தான் உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு வாக்குகள் அதிகரித்தது, அண்ணாமலையின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. அதிமுகவின் தோல்விக்கு தற்போது பொறுப்பு வகிக்கும் கட்சியின் தலைமையிடம் தான் கேள்வி கேட்க வேண்டும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை தொண்டர்களின் இயக்கமாக, மக்கள் இயக்கமாக வளர்த்தார்கள். அதிமுகவில் பிரிந்துள்ள சக்திகள் இப்போது ஒன்றிணையவில்லை என்றால், எந்த காலத்திலும் வெற்றிபெற முடியாது.” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கோவை: தாயை பிரிந்த குட்டியானை முதுமலை முகாமில் சேர்ப்பு!

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி புதிய சாதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel