ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, என் தந்தையை இழந்தது போல் நாட்டை இழக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொள்ள இருக்கும் பாத யாத்திரைக்காக நேற்று இரவு தமிழகம் வந்தார்.
இன்று காலை சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் சென்று அங்குள்ள தனது தந்தை ராஜிவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். கண்களை மூடி அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார்.
அங்கு நடைபெற்ற வீணை காயத்ரி இசையஞ்சலி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். நினைவிட நுழைவு வாயில் பகுதியில் கட்சியின் கொடியை ஏற்றினார்.
முன்பகல் 11.40 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்லும் அவர் அங்கிருந்து குமரி செல்கிறார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன்.
அதற்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன். அன்பு வெறுப்பை வெல்லும். நம்பிக்கை பயத்தை வெல்லும். ஒன்றாக வெல்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
யாத்திரைக்கு முன் தந்தை நினைவிடத்தில் ராகுல் காந்தி
வெற்றி பயணம் ஆகுக வாழ்த்துகள்
ராகுல் தம்பி நீங்க நீடுழி நீண்ட நாள் வாழனுங்க..அப்ப தான் மோடி நிரந்தர பிரதமாராக இருந்து கொண்டே இருப்பார்..
😀
நிரந்தர பிரதமரா?
🤔