case to remove the lotus symbol from BJP

”பாஜவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வழக்கு தொடர்வேன்” : சீமான்

அரசியல்

case to remove the lotus symbol from BJP

மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் பாரதிய ஜனதாவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வழக்கு தொடர உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், அவருக்கு புகழ்வணக்க கூட்டம் சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (மார்ச் 3) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த சாந்தனின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், ”தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 7 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. என்னைப் போன்று ஸ்டாலின், எடப்பாடி, அண்ணாமலை ஆகியோர் தனித்து போட்டியிட தயாரா?

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது அநீதி. நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தை குறைக்க சதி நடக்கிறது. சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுகிறது.

பொதுக்குழு வரி எதுவும் கட்டாத கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 32 லட்சம் ஓட்டு வாங்கிய எங்களுக்கு அதனை கொடுக்காமல், வெறும் 2 இடங்களில் போட்டியிட்டு, 71 ஓட்டுகள் மட்டுமே வாங்கியவருக்கு எப்படி கொடுக்க முடியும்?

அதே வேளையில் அங்கீகாரம் இல்லாத கட்சி என்றபோதும் பாமகவுக்கு தேர்தல் ஆணையம் மாம்பழம் சின்னம் ஒதுக்கியது எப்படி? இந்த சதிக்கு பின்னால் பாஜக இருக்கிறது என்பது எனக்கு தெரியும்.

இருந்தாலும் வரும் தேர்தலில் எந்த சின்னத்தை எங்களுக்கு கொடுத்தாலும், ஒரே நாளில் அதை மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெறுவோம். case to remove the lotus symbol from BJP

பாரதிய ஜனதாவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். சிறு வயதில் இருந்து பள்ளி புத்தகத்தில் தேசிய சின்னமாக படித்த தாமரையை எப்படி தேர்தல் சின்னமாக அறிவித்தார்கள்? மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்“ என்று சீமான் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

’புதுச்சேரியில் யார் போட்டி?’: அறிவித்த ரங்கசாமி

24 உதயசூரியன்கள்… இழுத்துப் பிடிக்கும் ஸ்டாலின்- திமுக கூட்டணியின் நிஜ நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *