எனது மகன் பணியை தொடர்வேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

அரசியல்

எனது மகன் திருமகன் ஈவெரா பணியை நான் தொடர்வேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தோ்தல் 27 ஆம் தேதி நடக்கிறது. இந்த தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ். இளங்கோவன் போட்டியிடுகிறாா்.

காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தனது தோ்தல் பிரசாரத்தை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதைக் காட்டிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை அதிகமாக விரும்புகிறேன்.

எனது மகன் பணியை நான் தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஈரோடுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டத்திற்காக நான் பாடுபடுவேன். இதற்காக அமைச்சர் முத்துசாமி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுடன் இணைந்து செயல்படுவேன்.

I will continue my son's work EVKS Elangovan

இந்த தேர்தலில் நிச்சயமாக நாங்கள் மிகப் பெரும் வெற்றியை பெறுவோம். ஈரோடு மாநகர் பகுதியில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாடுபடுவேன். இதைப்போல் சாயக்கழிவு நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பாடுபடுவேன்.

திமுகவினர் தேர்தல் பணிகளை சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர். நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் மிகப் பெரிய வெற்றியை பெறுவோம்” என்று கூறினார்.

மேலும் அவர், பாஜக தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரை அவர் என்னைவிட பெரிய மனிதர்.

நான் அவரை விட சின்ன மனிதர். அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. மேலும் எதைப் பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன் என்று கிண்டலாக கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே.எஸ். தென்னரசு அறிவிக்கப்பட்டார்.

அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவிருந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை ஈபிஎஸ் சந்திப்பிற்கு பிறகு, அவரது வேட்பு மனுத்தாக்கல் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அண்ணாமலை சந்திப்பிற்கு பின், ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் செந்தில் முருகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.இதனால் ஈரோடு இடைத் தேர்தல் பரப்புரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சக்தி

எடப்பாடியின் கூற்றை நீதிமன்றம் நிராகரித்துள்ளது: மனோஜ் பாண்டியன்

தேமுதிகவும் அதிமுகவும் ஒன்றுபட வேண்டும்: அண்ணாமலையின் டைப்போக்ராபி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.