சனாதனம் பற்றி உதயநிதி பேசியதற்காக அவரை மதிக்கிறேன் என்று ஆ. ராசா எம்.பி கூறியுள்ளார்.
திமுக சார்பில் செப்டம்பர் மாதம் திராவிட மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி TwitterSpaces என்ற நிகழ்ச்சியை எக்ஸ் சமூக வலைதளபக்கத்தில் நடத்தி வருகிறது.
அதில் நேற்று (செப்டம்பர் 4) , “கலைஞரும் இந்தியாவும்” என்ற தலைப்பில் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசியது பின்வருமாறு, “சித்தாந்த ரீதியாக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை எதிர்க்கும் சக்தி திமுகவுக்கு உள்ளது. அதனால் தான் இன்று உதயநிதி பேசிய பேச்சுக்கு வட நாடே அலறுகிறது.
சனாதன தர்மம் என்னெவென்றே தெரியாமல் வட நாட்டில் இத்தனை தலைவர்கள் பேட்டி கொடுக்கிறார்கள். கூட்டணிக் கட்சித்தலைவர்களே பேட்டி கொடுக்கிறார்கள். மம்தா பானர்ஜி பேட்டி கொடுக்கிறார்.
சனாதன தர்மத்தில் என்ன இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?
உதயநிதி அமைச்சராக இருப்பதை விட , இளைஞரணிச் செயலாளராக இருப்பதை விட அவர் இன்றைக்கு பேசிய பேச்சுக்கு நான் அவரை மதிக்கிறேன். ஏன் சனாதன சித்தாந்தம் தமிழ்நாட்டில் பெரிய பிரளயத்தை ஏற்படுத்தவில்லை.
அண்ணாமலை வானதி சீனிவாசன் போன்றவர்களால் ஏன் சனாதன தர்மத்தை கையில் எடுத்து அரசியல் செய்ய முடியவில்லை.
ஏனென்றால் சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை நூறாண்டு காலமாக திராவிட இயக்கம் செய்து கொண்டிருப்பதின் விளைவு தான் அது. இடையில் திராவிட இயக்கத்தில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டிருக்கலாம் நல்ல வேளையாக அதை தம்பி உதயநிதி கையில் எடுத்திருக்கிறார்.” என்றார் ஆ.ராசா.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா: பட்டர் சிக்கன் மசாலா
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணி!