அதிமுகவில் யாரையும் நான் பிரித்து பார்க்கவில்லை – சசிகலா

அரசியல்

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என அனைவரையும் ஒன்றாக சந்திக்கும் நேரம் மிக விரைவில் வரும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னையில் தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சசிகலா இன்று(அக்டோபர் 1) சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் யாரையும் நான் பிரித்து பார்க்கவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றுதான்.

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்து சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் அனைவரும் ஒன்றிணையும் சூழல் வரும். நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெறவேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது.

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு நேரில் ஆஜராகலாம் அல்லது என் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகலாம், எழுத்துவடிவில் எனது வாக்குமூலத்தை தரலாம் என்றார்கள். அதன்படி நான் எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தை தந்தேன்.

எல்லா மாநிலங்களிலும் ஒவ்வொரு கட்சி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. மத்தியில் ஏதாவது ஒரு ஆட்சி தான் நடக்க முடியும்.

அந்தந்த மாநிலத்திலிருந்து வரி செலுத்திக் கொண்டிருக்கிறோம். எனவே நமக்கு எதையும் கேட்டுப் பெற 100சதவீதம் உரிமை உண்டு.

நாம் ஆட்சி நடத்துகிறோம் என்றால் நமக்கு வேண்டியதை மத்திய அரசிடம் இருந்து கேட்டுதான் பெறவேண்டும். அந்த முயற்சிகளை எடுக்கவேண்டும். மக்கள் நம்மை முழுமையாக நம்பி ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு தேவையானதை நாம் செய்யவேண்டும்.

கட்சிகளுக்கு இடையே பிரச்சினை இருக்கத்தான் செய்யும். மக்களை பொறுத்தவரை அவர்களின் தேவையை பூர்த்தி செய்வோம் என்று நம்பி தான் ஒரு கட்சிக்கு வாக்களித்து ஆட்சியை கொடுக்கிறார்கள். அதை நல்லமுறையில் பயன்படுத்தி எடுத்துக் கொண்டு போகவேண்டும்.

கொடநாடு வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று சசிகலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் பெட்ரோல் குண்டுவீச்சு பற்றி சசிகலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் சிறந்த காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களை சரியாக பயன்படுத்தி அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டும் என்றார்.

கலை.ரா

மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் எப்போது?: பிடிஆர் பதில்!

மனிதச் சங்கிலி : உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *