நான் கொலை செய்து விட்டேன்: வைரலாகும் ராகுல் காந்தியின் பேச்சு!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி பழைய ராகுல் காந்தியை நான் கொலை செய்துவிட்டேன் என்று அவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பேட்டியின்போது செய்தியாளர் ஒருவர், ‘இந்த யாத்திரை உங்கள் அடையாளத்தை மாற்றி இருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, “உங்கள் மனதில் என்ன மாதிரியான ராகுல் காந்தி அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறாரோ அந்த ராகுல் காந்தியை நான் கொலை செய்துவிட்டேன்.

அந்த ராகுல் என் நினைவில் இல்லை. அவர் மறைந்துவிட்டார். இப்போது நீங்கள் பார்க்கும் ராகுல் காந்தி பழைய ராகுல் இல்லை.

இது புரிய வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் இந்து தர்மம் பற்றி படிக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்குப் புரியும். நான் என் மனதில் எந்த அடையாளமாகவும் இல்லை.

ஆனால் பாஜகவினரின் சிந்தனையில், புத்தியில் உள்ளேன். எனக்கென்று என்ன பிம்பம் இருக்கிறது என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

எனக்கு எந்த பிம்பம் பற்றியும் அக்கறையும் இல்லை. உங்களுக்கு என்ன மாதிரியான பிம்பத்தில் என்னை உருவகப்படுத்த விருப்பமோ நீங்கள் அப்படியே செய்யலாம்.

எனக்கு அதைப் பற்றி கவலையில்லை. நான் என் பணியை செய்ய வேண்டும் என்று மட்டும் நினைக்கிறேன்” என்றார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கவர்னர் வெளிநடப்பு: ஆளுநர் மாளிகை வட்டார தகவல்கள் சொல்வது என்ன?

ஆர்.என்.ரவியை போல் செயல்பட்ட மற்ற மாநில ஆளுநர்கள் யார் யார்?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts