தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக 101% வாய்ப்பு இருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.
காரைக்குடியில் இன்று (ஆகஸ்ட் 13) ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்த சட்டக்கல்லூரி மற்றும் விவசாய கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைப்பதற்கும், நூலகங்களில் மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 54 லட்சம் ரூபாயை வழங்கியதாகவும் கூறினார்.
போதை ஒழிப்பு என்பதில் யாருக்கும் மாற்றுகருத்தே இருக்க முடியாது என்று கூறிய ப.சிதம்பரம், ஒரே நாடு ஒரே தேர்வு என்பது தவறான முன் உதாரணம் என்றும் இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் முயற்சி என்றும் குற்றம்சாட்டினார்.
அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக நீங்கள் வருவீர்களா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ப.சிதம்பரம் நான் தமிழக காங்கிரஸ் தலைவராக வர 101 சதவிகிதம் வாய்ப்புள்ளது. அதனை அகில இந்திய காங்கிரஸ் கட்சிதான் முடிவெடுக்க வேண்டும் என்று கிண்டலாக பதிலளித்தார்.
ரஜினி – ஆளுநர் சந்திப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ஆளுநரை ரஜினி சந்தித்தது அவருடைய உரிமை.
ரஜினிதான் அரசியல் பேசியதாக கூறியுள்ளார். ஆளுநர் பேசியதாக கூறவில்லை என்று ப.சிதம்பரம் பதிலளித்தார்.
கலை.ரா
பாஜக: இரவில் விலகிய சரவணனை காலையில் நீக்கிய அண்ணாமலை