கவுதமியோடு பேசிக்கொண்டிருக்கிறேன் : அண்ணாமலை

அரசியல்

நடிகை கவுதமியுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகுவதாக இன்று (அக்டோபர் 23) காலை திடீரென அறிவித்தார்.

“கடந்த 37 வருடங்களாக சினிமா, தொலைகாட்சி, வானொலி, டிஜிட்டல் மீடியா ஆகிய துறைகளில் உழைத்து சேர்த்த மொத்த சொத்துகளையும், பாஜக பிரமுகரான அழகப்பன் மோசடி செய்து ஏமாற்றிவிட்டார்.

இந்த விஷயத்தில் தற்போது வரை எனக்கு ஆதரவு தராமல், என்னை ஏமாற்றி தலைமறைவாகி உள்ள அழகப்பனுக்கு பாஜகவின் மூத்த உறுப்பினர்கள் பலரும் ஆதரவாக உள்ளனர்” என ராஜினாமா குறித்த அறிவிப்பில் தெரிவித்திருந்தார் கவுதமி.

இதுதொடர்பாக சென்னை தி.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “கவுதமி எப்போதும் என்னுடன் தொடர்பில் இருப்பார். அலுவலகத்துக்கு வருவார். தொலைபேசியில் பேசுவார். இன்று காலை கூட கவுதமியிடம் தொலைபேசியில் பேசினேன்.

அவருடைய சொத்துகளை 25 ஆண்டுகளாக அவருடன் பணியாற்றிய நபர் அபகரித்துவிட்டதாக கவுதமி பத்திரிகை செய்தி கொடுத்த அன்றே நான் அவரை தொடர்புகொண்டேன்.

பாஜக கட்சியில் இருந்து ஒரு குழுவை அமைத்து, அன்று சென்னையில் இருந்த உயரதிகாரியிடம் பேசி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்தோம். கவுதமியும் அந்த அதிகாரியை சந்தித்து புகார் கொடுத்தார்.

ஆனால் இந்த வழக்கில் எதிர்பார்த்த அளவுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு பக்கம் போலீஸ் தரப்பிடம் கேட்டால் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வாங்கியிருக்கிறார், தலைமறைவாக இருக்கிறார் என்கிறார்கள்.

திமுகவை சார்ந்து இருக்கக் கூடிய காவல்துறையோ, அல்லது நடுநிலையாக இருக்கக் கூடிய காவல்துறையோ கவுதமிக்கு ஃபேவர் செய்யுங்கள் என்று பாஜக சொன்னால் கேட்பார்களா. காவல்துறை உயரதிகாரிகள் கேட்பாளர்களா?

கவுதமியின் புகார் மீதான நடவடிக்கை நத்தை வேகத்தில்தான் போய்கொண்டிருக்கிறது.

அதுபோன்று கவுதமி புகார் அளித்த அந்த நபர், பாஜவைச் சேர்ந்த சில மந்திரிகளோடு புகைப்படம் எடுத்திருக்கிறார்…. ஒரு அறக்கட்டளை சார்ந்திருக்கிறார் என்பதெல்லாம் தனிநபர் சார்ந்தது. அதில் கட்சி தலையிடாது.

பாஜகவுக்கும் அந்த நபருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நானோ அல்லது மூத்த தலைவர்களோ அவருடன் தொடர்பில் இல்லை. அவரிடம் நான் பேசியது கூட கிடையாது.

இந்த விஷயத்தில் நான் கவுதமியுடன் இருக்கிறேன். இது கவுதமி வாழ்நாளில் சம்பாதித்த சொத்து. காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இன்று காலை கூட கவுதமியிடம் பேசும் போது,யாராவது குற்றவாளியை காப்பாற்றுவதற்காக செயல்படுகிறார்களா, அவர்களது பெயரை சொல்லுங்கள் என்று கேட்டேன். நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று சொன்னேன்.
மற்றப்படி, அவர்கள் கட்சியில் தொடர்வதும், தொடராததும் அவருடைய விருப்பம். அவர் கட்சியில் இல்லை என்றாலும் அவருக்கு பாஜக உதவும்” என்றார்.

பிரியா

தினமும் ஆவி பிடித்தால் முகம் பளப்பளப்பாகுமா?

சைலேந்திர பாபு நியமன பரிந்துரை : ஆளுநர் மீண்டும் நிராகரிப்பு?

ஒரே வாரத்தில் 15 லட்சம் ஐபோன்கள் விற்பனை!

+1
0
+1
3
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0

1 thought on “கவுதமியோடு பேசிக்கொண்டிருக்கிறேன் : அண்ணாமலை

  1. Annamalai evasive comments. Goutami close proximity to Modi well known fact.

Comments are closed.