ஜெயலலிதா மாதிரியான தலைவர் இனி பிறக்கப்போவதில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக நிர்வாகிகளாக இருந்த சி.டி.நிர்மல் குமார், திலீப் கண்ணன் உட்பட சிலர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று(மார்ச் 7) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பாஜகவில் இருந்து ஆட்களை கூட்டி சென்றால்தான் தமிழகத்தில் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும்.
நான் இங்கு இட்லி, தோசை சுட வரவில்லை. நான் தலைவராக வந்திருக்கிறேன். தலைவராக இருக்கிறவர் தலைவர் போலத்தான் முடிவெடுப்பார்.
ஜெயலலிதா அம்மையார் முடிவு எப்படி இருக்குமோ, அதன்படிதான் எனது முடிவும் இருக்கும். அவரது கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் வெளியே வந்து திமுகவில் சேரவில்லையா?. அதேபோல் கலைஞர் ஐயாவிடமிருந்து யாரும் வெளியே வரவில்லையா?. எனெனில் அவர்கள் தலைவர்கள்.
தலைவர்கள் முடிவெடுத்தால் 4பேர் கோபித்துக்கொண்டு வெளியே போகத்தான் செய்வார்கள். நானும் அந்த மாதிரி தலைவர் தான். அதேசமயம் ஜெயலலிதா போன்று நான் பெரிய ஆள் என்று சொல்லவில்லை. தலைவர் என்ற பெயரை பயன்படுத்துகிறேன்” என்றார்.
இதுதொடர்பாக இன்று(மார்ச் 8) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “ஜெயலலிதா மாதிரியான தலைவர் என்று சொல்ல யாருக்கும் தகுதி இல்லை. அண்ணாமலை எப்படி தலைவரானார் என்பது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை.
ஜெயலலிதா மாதிரியான ஒரு தலைவர் இனி பிறக்க போவது கிடையாது. அந்தளவுக்கு ஆற்றல், நிர்வாகத் திறமை, அரவணைத்து செல்வது, இரும்புக்கரம் கொண்டு செயல்படுவது என அனைத்துக்கும் சொந்தக்காரர் அவர்.
செஞ்சிக் கோட்டை ஏறுகிறவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது” என விமர்சித்தார்.
பிரியா
அதிமுக – பாஜக மோதல் : எடப்பாடி ஆலோசனை!
இலவச பயணம் பெண்களின் உரிமை: முதல்வர் ஸ்டாலின்
ANNAMALAIKKU MEESAI KIDAIYATHU SIR