வேலூர் திமுக மக்களவை தொகுதி வேட்பாளரான கதிர் ஆனந்துக்காக இன்று (மார்ச் 26) தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்.
வாணியம்பாடியில் பேசிய உதயநிதி, “இன்று வாணியம்பாடியில் கதிர் ஆனந்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்கலாம் என்றுதான் வந்தேன். ஆனால் இங்கு வந்து உங்கள் எழுச்சியை பார்த்ததும் ஏற்கனவே நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க முடிவு செய்துவிட்டீர்கள் என்பதை அறிந்தேன்.
வேலூருக்கும் எனக்கும் முக்கியமான பந்தம் இருக்கிறது. 2019 இல் நான் கட்சியில் அடிப்படை உறுப்பினராகத்தான் இருந்தேன். எந்த பொறுப்பிலும் கிடையாது.
அப்போது முதன் முறையாக கதிர் ஆனந்துக்காக வாக்கு கேட்டு இங்கு வந்தேன். பொதுச் செயலாளர் துரைமுருகன், என்னைத் தட்டிக் கொடுத்து, ‘நல்லா பண்ணிட்டு வா’ என்றார். Udayanidhi vellore Campaign
கதிர் ஆனந்துக்காக நான் முதலில் வாக்கு சேகரிக்க வந்தேன். அதையடுத்து இளைஞரணிச் செயலாளாராகி, சட்டமன்ற உறுப்பினராகி., அமைச்சராகவும் ஆகி இங்கே வந்திருக்கேன்.
ஒரு ஃபுல் சுற்று சுற்றி வந்திருக்கிறேன். ஆனாலும் நான் இங்கே அமைச்சரா வரலை. சட்டமன்ற உறுப்பினரா வரலை, இளைஞரணிச் செயலாளரா வரலை.
நான் கதிர் ஆனந்துடைய காலேஜ் மெட். அவரோட ஜுனியர். அரசியல்லையும் அவருக்கு நான் ஜூனியர்,. காலேஜ்லயும் ஜூனியர், பள்ளியிலயும் அவருக்கு ஜூனியர். அந்த உரிமையோட நான் அவருக்கு வாக்கு கேட்டு வந்திருக்கேன்.
ஆனால் சென்ற முறை நீங்க கொஞ்சம் சோதிச்சிட்டீங்க. 8 ஆயிரம் சொச்சம் வாக்கு வித்தியாசத்துலதான் ஜெயிக்க வைச்சீங்க. அதற்கும் சேர்த்து வச்சி இந்த முறை… 2 லட்சம் 3லட்சம் வாக்கு வித்தியாசத்துல ஜெயிக்க வைக்கணும்.
என்னோட பொது வாழ்வுல முதல் கைது… சிஏஏ சட்டத்தை கிழித்து எறிந்து சிறை சென்றதுதான். இந்தியாவுலயே ஒரு மாநிலத்துல, தமிழ்நாட்ல சிஏஏவை அனுமதிக்கமாட்டேன் என சொன்ன ஒரே தலைவர் நமது முதல்வர்தான்.
முத்தலாக் தடை சட்டத்தை கொண்டுவந்தது பாஜக அரசு. அப்போது அதிமுகதான் இவற்றையெல்லாம் ஆதரித்தது. அதற்கெல்லாம் பதில் சொல்லும் தேர்தல்தான் இந்தத் தேர்தல்.
மீண்டும் மீண்டும் நான் உங்களிடம் கேட்பது கதிர் ஆனந்தை இரண்டு லட்சம் ஓட்டு வித்தியாசத்துல ஜெயிக்க வைக்க வேண்டும். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு டிரைலர் வரும். அதுபோல நான் டிரைலர்தான். மெயின் பிக்சரான தலைவர் அடுத்து வருவாரு” என்று கலகலப்பாக பேசினார் உதயநிதி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
மயிலாடுதுறை வேட்பாளர் யார்?: ஒருவழியாக அறிவித்த காங்கிரஸ்!
“நான் பல்ல காட்டுறேன்… நீங்க என்னத்த காட்டுறீங்க” : உதயநிதிக்கு எடப்பாடி கேள்வி!
Udayanidhi vellore Campaign