நிதி அயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜியை அவமதித்ததற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று (ஜூலை 27) நடைபெற்ற நிதி அயோக், கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தவிர இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக முதலில் அறிவித்தார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்.
இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று தனது எதிர்ப்பை தெரிவிப்பேன் என்று கூறிவிட்டு சென்ற மம்தா பானர்ஜி கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
“தான் பேசிக் கொண்டிருக்கும் போதே குறிப்பாக, மாநிலத்தின் பிரச்சினைகள் குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது தனது மைக்கை ஆப் செய்து விட்டனர்” என்று மம்தா பானர்ஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 20 நிமிடங்கள் வரை பேச அனுமதி அளித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் மம்தா பானர்ஜியை அவமதித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்,
“இதுதான் கூட்டாட்சி தத்துவமா? ஒரு மாநிலத்தின் முதல்வரை இப்படியா நடத்துவது? எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்”
என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
NITI Aayog : சந்திரபாபுவுக்கு 20 நிமிடம் அனுமதி… ஆனால் எனது மைக் ஆப் – கொந்தளித்த மம்தா
“வரி வாங்க தெரியுது, திரும்ப கொடுக்க தெரியாதா” : பட்ஜெட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!