இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டு விழா –  முதல்வர் வெளியிட்ட தகவல்!

Published On:

| By Kavi

Celebrate 75th Constitution Day

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டை சிறப்பாக எப்படிக் கொண்டாட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் விடுத்துள்ள அறிவிப்பில், மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வரும் நாளை (26.11.2024) காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், மாண்பமை உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள் / கருத்தரங்குகள் / வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்.

மகளிர் ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு!

பியூட்டி டிப்ஸ்: முகத்தைப் பளபளப்பாக்கும் காபித்தூள் – கற்றாழை ஜெல்!

டாப் 10 செய்திகள் : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முதல் கனமழை வரை!

ஹெல்த் டிப்ஸ்: அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்களா நீங்கள்? காரணம் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel