விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவுதான் என்று அவரது மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன்கள் சண்முக பாண்டியன், விஜயபிரபாகரன் இருவரும் இன்று (ஆகஸ்ட் 21) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தொண்டர்கள் எல்லாம் விஜயகாந்த்தை வேண்டும் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார்கள். கட்சி நிகழ்வுகளுக்கு எப்போது வருவார்? அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மகன் விஜயபிரபாகரன், “உடல்நிலை பின்னடைவுதான். ஆனால் கேப்டன் விஜயகாந்த் 100 வருடம் நன்றாக இருப்பார். பழையபடி வருவாரா, பேசுவாரா என்றால் அதற்கான முயற்சியை எடுத்துக்கொண்டிருக்கிறோம். இப்போதைக்கு நலமாக இருக்கிறார்.
“முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது” என்பது கேப்டனின் தாரகமந்திரம், அதைதான் எங்களது தாரக மந்திரமாகவும் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
என்னுடைய கனவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு தொண்டர்களுக்காக ஓடோடி கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
அதிமுக மாநாடு குறித்து பேசிய விஜயபிரபாகரன், “அதிமுகவுக்குள் குழப்பம் இருக்கிறது. அதனால் நீ பெருசா, நான் பெருசா என்றுதான் இந்த மாநாட்டை நான் பார்க்கிறேன். எனக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை. எனவே யார் பொதுச்செயலாளர் என்ற கேள்வியை அதிமுக தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும்.
தேமுதிக மட்டுமல்ல பல்வேறு கட்சிகளில் இருந்தும் பிரிந்து மாற்று கட்சிக்கு செல்கிறார்கள். உதாரணமாக செந்தில் பாலாஜியை எடுத்துக்கொண்டால் அவர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்று தற்போது ஜெயிலுக்கு சென்றிருக்கிறார்.
தேமுகவில் இருந்து விலகிச் செல்பவர்கள் காசு வாங்கிக் கொண்டு விலகிச் செல்கிறார்கள். இங்கு இருக்கும் போது அண்ணன் அண்ணி என்பார்கள். விலகிச் சென்றதும் அந்நியவாதியாக தெரிவோம்” என்று குறிப்பிட்டார்.
வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி விஜயகாந்த் 71 ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
அதிமுக மாநாடு – விபத்தில் 8 பேர் பலி: ஈபிஎஸ் நிதியுதவி!
கல்லூரிக்குள் நாட்டு வெடி குண்டு வீச்சு?: சென்னையில் அதிர்ச்சி!
ராதிகா 60: சீர்மை நிறைந்த ஏறுமுகம்!