அமலாக்கத் துறை விசாரணையைத் தொடர்ந்து நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு அமைச்சர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
அந்தவகையில் அமைச்சர்கள் பொன்முடி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை தந்தனர்.
உள்ளே சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பார்த்து வந்த பின் இருவரும் செய்தியாளர்களிடம் பேசினர்.
அமைச்சர் பொன்முடி கூறுகையில், “செந்தில் பாலாஜி உடல்நிலை ஓரளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. விரைவில் பூரண குணமடைவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள அமைச்சர்களையும், கட்சியினரையும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்கெல்லாம் அஞ்சுபவர் முதல்வர் அல்ல. அவரை மிசாவில் பிடித்துப் போட்டுப் பழிவாங்கியிருக்கிறார்கள் ஏதுவாக இருந்தாலும் ஒன்றிய அரசின் பொய் பிரச்சாரத்தைத் தமிழக மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றார்.
பிரியா
செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை : கே.என். நேரு