ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வரும் செப்டம்பர் 2024 க்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370 ஆவது பிரிவை ரத்து செய்ததற்கு எதிரான பல வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து இன்று (டிசம்பர் 11) தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை வாசித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், “ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தபோதே அதன் சிறப்பு அந்தஸ்து, தனி இறையாண்மை ஆகியவை முடிவுக்கு வந்துவிட்டன. எனவே சிறப்பு அந்தஸ்து 370 ஐ ரத்து செய்தது செல்லும், மேலும் லடாக்கை தனி யூனியன் பிரதேசம் ஆக்கியது செல்லும்” என்று தீர்ப்பளித்தார்.
மேலும், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துக்கு 2019 முதல் தேர்தல் நடத்தாததை சுட்டிக் காட்டிய உச்ச நீதிமன்றம், “ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்” என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. மாநில அந்தஸ்தை ஜம்மு காஷ்மீருக்கு கூடிய விரைவில் மத்திய அரசு வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செம இண்டர்வெல், வொர்ஸ்ட் கிளைமாக்ஸ்… சொதப்பல் வீரரால் ரசிகர்கள் வேதனை!
வெள்ளத்தில் பழுதான வாகனங்கள்: உதவி எண்கள் அறிவிப்பு!