அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, இந்திய ஹாக்கி அணி வீரர் கார்த்திக் இல்லத்திற்கு, சென்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு ஒதுக்கீட்டு ஆணை மற்றும் ₹10 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ஹாக்கி வீரர் கார்த்திக். இவர் கடந்த மே மாதம் இந்திய ஹாக்கி அணிக்குத் தேர்வாகி இருந்தார்.
இவரின் தந்தை செல்வம் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். மேலும் தாய் வளர்மதி வீட்டு வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் வறுமையை பொருட்படுத்தாமல் மகன் கார்த்திக்கைப் படிக்க வைத்தனர் அவரது பெற்றோர்கள்.
அதே வேளையில் கார்த்திக் விளையாட்டில் சாதிப்பதற்கும் அவர்கள் பக்கபலமாக இருந்து வந்தனர். பெங்களூருவில் ஹாக்கி பயிற்சி மேற்கொண்டு வந்த கார்த்திக், கடந்த மே மாதம் இந்திய ஹாக்கி அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், அவரது குடும்பம் தொடர்ந்து வறுமையில் சிக்கித் தவித்தது. இந்நிலையில் உதவி கேட்டு அவரது பெற்றோர்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
கார்த்திக் குறித்த செய்திகள் மீடியாக்களில் வெளியானதைத் தொடர்ந்து, தமிழக அரசு அவருக்கு உதவ முன்வந்தது.
இதன்படி அரியலூர் சென்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கார்த்திக்கின் பெற்றோரைச் சந்தித்து தமிழக அரசு சார்பில் ரூபாய் 10 லட்சம் நிதியுதவியை முதல்வர் வழங்குவார்.
மேலும், விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்கும் எனவும் உறுதியளித்தார்.
இந்நிலையில்,அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, இளம் இந்திய ஹாக்கி அணி வீரர் கார்த்திக் இல்லத்திற்கு நேற்று இரவு (நவம்பர் 28 ) நேரடியாகச் சென்று கார்த்திக் குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிதி மற்றும் வீடு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உங்கள் மகனை தீவிரவாதி என்று அழைப்பீர்களா? பேராசிரியரை அலறவிட்ட மாணவன்!
உலகக்கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய போர்ச்சுகல்