இலங்கை அதிபர் தேர்தலில் மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 42.31 சதவீத வாக்குகள் பெற்று வரலாற்று வெற்றியை பெற்றுள்ளார்.
இலங்கையின் 9வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று (செப்டம்பர் 21) நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க இன்று காலையில் 50 சதவீத வாக்குகளுக்கு மேல் முன்னிலையில் இருந்தார். ஆனால் பிற்பகலில் சமகி ஜன பலவேகய கட்சி சார்பில் போட்டியிட்ட் சஜித் பிரேமதாச சிறிது சிறிதாக முன்னேறி வந்தார்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில், இறுதியாக அனுர குமார திசநாயக்க 39.45% வாக்குகள் பெற்று முதலிடமும், சஜித் பிரேமதாச 34.32% வாக்கு சதவிகிதத்துடன் இரண்டாவது இடமும், ரணில் விக்ரமசிங்கே 17.25% வாக்கு சதவிகிதத்துடன் மூன்றாவது இடமும் பெற்றனர்.
இலங்கை அதிபர் தேர்தலை பொறுத்தவரை, 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
ஆனால் பெரும் திருப்பமாக இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாருமே பெரும்பான்மையை பெறவில்லை. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது வாக்கு எண்ணிக்கை எனப்படும் வாக்காளர்களின் விருப்ப வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின.
அதன்படி தற்போதைய அதிபர் ரணில், நமல் ராஜபக்சே மற்றும் அரியநேந்திரன் உட்பட மற்ற 36 வேட்பாளர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு, முதல் இரண்டு இடங்களை பிடித்த அநுர குமார திஸநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.
விருப்ப வாக்கு எண்ணிக்கையில் அநுர மற்றும் சஜித் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது. எனினும் மொத்தம் 5,634,915 வாக்குகளுடன் (42.31%) தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் அவர் இலங்கை அரசின் 9வது அதிபராகிறார்.
அவருக்கு அடுத்தபடியாக முன்னிலை பெற கடுமையாக போராடிய சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளுடன் (32.76%) இரண்டாவது இடம் பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”திருடப்படும் வேள்பாரி காட்சிகள்”: இயக்குநர் ஷங்கர் கடும் எச்சரிக்கை!
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் : பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்!