செருப்பு மாலை, புகைப்பட எரிப்பு : ஆ. ராசாவுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

அரசியல்

திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு எதிராக சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா இந்து மதம் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

அதில், முஸ்லிம், கிறிஸ்தவர் அல்லது பார்சி அல்லாத யாராக இருந்தாலும் இந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறுவதாக பேசியிருந்தார்.

இந்த கொடுமை எந்த நாட்டிலாவது உண்டா என கேள்வி எழுப்பிய அவர், இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கிற வரை விபச்சாரியின் மகன், இந்துவாக இருக்கிற வரை பஞ்சமன், தீண்டத்தகாதவன் என்றும் கூறியிருந்தார்.

ஆ.ராசாவின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். ஆ.ராசா பேசிய வீடியோவை செப்டம்பர் 12ஆம் தேதி தனது ட்விட்டரில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஆ.ராசாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பின. குறிப்பாக இந்து முன்னணி அமைப்பினர் ஆ.ராசாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக போலீசார் இடையே மோதல்!

ஆ.ராசாவை கண்டித்து நேற்று நள்ளிரவு இந்து முன்னணி அமைப்பினர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே போஸ்டர் ஒட்டினர்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் அவரது ஓட்டுநர் பாண்டி, இந்து முன்னணி அமைப்பினரிடமிருந்து போஸ்டர்களை வாங்கிக் கொண்டு தடுத்து நிறுத்தினர்.

இதனை கண்டித்து பாஜக நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது வாகனத்திலிருந்து இறங்கிய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் ஓட்டுநர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாஜக நகர தலைவர் சீனிவாசன் மற்றும் ரகு பாபு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காரைக்குடியில் போராட்டம்!

ஆ.ராசா எம்.பியை கண்டித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் அக்னிபாலா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகில் இந்து முன்னணியினர் ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், இந்து மதத்தினரை இழிவாக பேசியதாக கூறி ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Hindu leaders protest against a Raja


கோவை
பொள்ளாச்சி தலைமை தொலைபேசி நிலையம் முன்பு இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு பேசிய அண்ணாதுரை, “இந்து என்றால் விபச்சாரியின் மகன் என்று இந்துக்களைப் பற்றி மிகவும் கேவலமான வார்த்தையில் ஆ.ராசா பேசியிருக்கிறார்.

திமுகவில் உள்ள 90 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அப்படியென்றால் 90% பேரும் விபச்சாரிகளின் மகனா? என்பதை ஆ. ராசா தான் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று ஆவேசமாகக் கூறினார்.

Hindu leaders protest against a Raja

துடியலூர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி அமைப்பினர் ஆ.ராசாவின் படத்துக்குச் செருப்பு மாலை அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த படத்தை பிடுங்கி அவர்களை போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தியதால் போலீசாருக்கும் ஆர்ப்பாட்ட காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மதுரை

மதுரை நேதாஜி சாலையில் உள்ள ஜான்சிராணி பூங்கா அருகே நேதாஜி சிலை முன்பு இந்து முன்னணியினர் ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Hindu leaders protest against a Raja

சென்னை

வள்ளுவர் கோட்டம் அருகே இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணி மாநில துணை தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர். அப்போது ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனங்களை எழுப்பியதோடு, ஆ.ராசாவின் போட்டோவை தீ வைத்து எரித்தனர்.

இதைப் பார்த்த பாதுகாப்பிலிருந்த போலீசார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுபோன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதனிடையே இந்து மக்கள் புரட்சிப்படை அமைப்பாளர் கண்ணன், ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார்.

அதோடு, ஆ.ராசாவின் நாக்கை அறுத்துக் கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் ரொக்க பணமும், ஒரு ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரியா

தைவானில் பயங்கர நிலநடுக்கம்: அடியோடு சாய்ந்த அடுக்குமாடி கட்டிடம்!

குளியல் வீடியோ லீக்: தொடரும் மாணவிகள் போராட்டம்!

+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
1
+1
0

1 thought on “செருப்பு மாலை, புகைப்பட எரிப்பு : ஆ. ராசாவுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

  1. ஆ ராசா குறிப்பிடும் சூத்திரன்கள் வே/மகன்கள் இந்தக் கூட்டம்தானா??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *